பொன்முடி வழக்கில் உயர் நீதிமன்றம் காட்டம்

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது புகார் கொடுத்தவருக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெற்று அதன் பிறகு தான் வழக்கை போலீசார் முடித்து வைக்க முடியும் என்றும் உங்கள் செயலை கோர்ட் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சைவம், வைணவம் குறித்து பொன்முடி பேசியது குறித்த வழக்கில், புகார்களை முடிக்க காவல்துறைக்கு உரிமை இருந்தால்; வழக்கு தொடர நீதிமன்றத்திற்கும் உரிமை உண்டு என நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளார். இந்த வழக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags :