அஜித்குமாரின் நண்பர் மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை அருகே போலீஸ் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்த நிலையில், காயமடைந்த அவரது சகோதரர் சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அஜித்தின் நண்பரும் ஆட்டோ ஓட்டுநருமான அருண் என்பவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காலில் ஏற்பட்ட வீக்கம், ரத்தகட்டுக்கு ஸ்கேன் எடுத்து, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :