டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வடகாடு, அதனை சுற்றியுள்ள 3 மதுபானக் கடைகளை இன்று மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோயில் திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
Tags : டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட உத்தரவு.