மதுரை ஆதினம் மீது நடவடிக்கை: திராவிட பெரியார் கழக சார்பில் காவல் ஆணையரிடம் புகார்.

மதுரை ஆதீனமாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஞானசம்பந்தன் என்பவர் தனது கார் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கடந்த மூன்றாம் தேதி சென்னையில் பேசி இருந்தார். அந்த விபத்தை இஸ்லாமியர்கள் ஏற்படுத்தி கொலை செய்ய திட்டமிட்டதாக பொய் செய்தியை ஊடகம் மூலம் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட பெரியார் கழகம் சார்பில் அதன் தலைவர் மணிஅமுதன் தலைமையில் ஆதினத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளனர்.
Tags : மதுரை ஆதினம் மீது நடவடிக்கை: திராவிட பெரியார் கழக சார்பில் காவல் ஆணையரிடம் புகார்.