போதை ஊசி எடுத்துக்கொண்ட 17 வயது சிறுவன் பலி

by Staff / 25-05-2024 02:36:16pm
போதை ஊசி எடுத்துக்கொண்ட 17 வயது சிறுவன் பலி

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் நேற்று (மே 24) மாலை பிராட்வே பகுதியில், நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. எடுத்துக்கொண்ட சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மற்ற நண்பர்கள் அந்த சிறுவனை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து பரிசோதித்ததில் சிறுவனின் பாக்கெட்டில் போதை மருந்து, ஊசி போன்றவை இருந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories