“பாஜகவினரிடம் நாகரிகமும் இல்லை;  மரியாதையும் இல்லை” – பேரவையில் மம்தா!

by Editor / 06-07-2021 06:37:37pm
“பாஜகவினரிடம் நாகரிகமும் இல்லை;  மரியாதையும் இல்லை” – பேரவையில் மம்தா!

 


ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்துக்கு நியமிக்கப்பட்ட ஆளுநர், மத்தியில் ஆளும் பாஜக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவர். அவரை அவையில் பேசுவதற்கு பாஜக எம்எல்ஏக்கள் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், அவரைப் பேசவிடாமல் பாஜக எம்எல்ஏக்கள் அவமதித்த அமளியில் ஈடுபட்டனர்.
பாஜகவின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் போன்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது இருக்கும் பாஜக முற்றிலும் வித்தியாசமானது. இப்போதுள்ள பாஜக எம்எல்ஏக்களுக்கும், உறுப்பினர்களுக்கும் கலாச்சாரமும் தெரியவில்லை, நாகரிகமும், மரியாதையும் என எதுவுமே தெரியவில்லை. அவர்களுக்குப் பேசவும் தெரியவில்லை” என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo