ஸ்ரீதேவியின் கடைசி புகைப்படம் - பகிர்ந்த போனி கபூர்

நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி காலமானார். இன்றுடன் அவர் உயிரிழந்து 5 வருடங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன் எடுத்த கடைசி புகைப்படத்தை தற்போது அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர், ‘இறுதிப் புகைப்படம்’ என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் ஏதோ நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டதுபோல தோன்றுகிறது. திரை ரசிகர்கள் பலரும் ஸ்ரீதேவி குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
Tags :