எஸ்.பி.,வேலுமணிக்கு நெருக்கமானவரின் கல் உடைக்கும் ஆலையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

by Admin / 12-08-2021 03:36:43pm
எஸ்.பி.,வேலுமணிக்கு நெருக்கமானவரின் கல் உடைக்கும் ஆலையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் நேற்றுமுன்தினம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

எஸ்.பி.,வேலுமணிக்கு நெருக்கமானவரின் கல் உடைக்கும்  ஆலையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
லஞ்ச ஒழிப்பு போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்ற போது எடுத்தப்படம்.
வெள்ளகோவில்:

சென்னை மற்றும்கோவை மாநகராட்சிகளில் டெண்டர்ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின்பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.,வேலுமணி மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் நேற்றுமுன்தினம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா வெள்ளகோவில் ஒன்றியம் வேலூர் கிராமத்தில் உள்ள கே.சி.பி. என்ஜினீயரிங் நிறுவனத்திற்கு சொந்தமான கல் உடைக்கும் தொழிற்சாலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  அதிரடி சோதனை நடத்தினர்.
 
நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை நடைபெற்றது. 6 மணி நேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் 

 

Tags :

Share via
Logo