பிரபல இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான ஏ ஆர் ரகுமான் -சாய்ரா பானு விவாகரத்து

பிரபல இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது பெற்றோருமான ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு தம்பதியினர் தம் 29 ஆண்டுகால குடும்ப வாழ்க்கையில் இருந்து பிரிகின்றனர். இது குறித்து சாய்ரா பானு இருவரும் பிரிவதை வழக்கறிஞர் வழி உறுதி செய்தார். இருவரும் நேசமாக இருந்த நிலையில் தொடர்ந்து ஏற்பட்டிருக்கின்ற கருத்து முரண்பாட்டின் காரணமாக தாங்கள் இது போன்ற ஒரு முடிவை எடுத்து இருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏ ஆர் ரகுமான் சாய்ராம் தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மதுரையில் பிரபலமான ஹாஜி மூஸா என்கிற ஜவுளி கடையின் அதிபரின் மகள் சாய்ரா பானு. இவரது அக்கா கணவர் தான் நடிகர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் திரைப்பிரபலங்கள் ஒவ்வொருத்தராக விவாகரத்து பெருகின்ற நிலை தொடர்கிறது. நடிகர் தனுஷ், ஜெயம் ரவி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என பட்டியல் நீள்கிறது.
Tags :