தன்னை பொதுவெளியில் கடவுளே என்று அழைப்பதை விரும்பவில்லை-நடிகர் அஜித் குமார்

by Admin / 10-12-2024 11:36:23pm
தன்னை பொதுவெளியில் கடவுளே என்று அழைப்பதை விரும்பவில்லை-நடிகர் அஜித் குமார்

 நடிகர் அஜித் குமார் தன்னை பொதுவெளியில் கடவுளே என்றும் வேறு முன்னொட்டுக்களோடு அழைப்பதை விரும்பவில்லை என்றும் தன்னை பெயர் சொல்லியே அழைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் ..அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில் பொது வழியில் அநாகரிகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும், கடவுளே அஜித்தே  என்ற இந்த கோசம் என்னை கவலையடை செய்திருக்கிறது .எனது பெயரை தவிர்த்து, என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை .எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசவுரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.

என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் .யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள். வாழு... வாழ விடு. என அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via