விஜய் சேதுபதி அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவர உள்ள மௌன திரைப்படம் காந்தி டாக்ஸ். ஜனவரி 30 2026 அன்று
விஜய் சேதுபதி அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவர உள்ள மௌன திரைப்படம் காந்தி டாக்ஸ்(காந்தி பேச்சு). ஜனவரி 30 2026 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது. சமூகத்தில் பணத்திற்கான தேவை பேராசை மற்றும் ஊழல் ஆகியவை தனிமனித வாழ்க்கை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை வசனங்கள் இன்றி உணர்ச்சிகள் வழியாக படம் விளக்குகிறது.. இப்படத்தின் தலைப்பு மற்றும் திரைக்கதையில் வரும் ரூபாய் நோட்டுகள் மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கும் இன்றைய பண பித்துக்கும் இடையே உள்ள முரண்பாட்டை விளக்குகிறது. ஏ .ஆர். ரகுமானின் பின்னணி இசை, வசனங்கள் இல்லாத இடங்களை நிரப்பி பணத்தின் மீதான மனிதனின் உளவியல் ரீதியான போராட்டத்தை ஆழமாக பதிவு செய்துள்ளது. கிஷோர் பாண்டுரங்க வினிகர் இயக்கியுள்ள திரைப்படம் மௌனமாய் உணர்ச்சிகளின் வழி சமூகத்தின் அவலத்தை பணக்காரன் ஏழை என்கிற இரண்டு கதாபாத்திரங்களில் வழி விளக்குகின்றது.
Tags :


















