“புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சனை?” - எல். முருகன் கேள்வி

by Staff / 17-02-2025 12:15:13pm
“புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சனை?” - எல். முருகன் கேள்வி

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், மத்திய இணையமைச்சர் எல். முருகன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்சனை?. ஆரம்ப கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் இந்தக் கொள்கையின் நோக்கம். இது, கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனை படி உருவாக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம்” என்றார்.

 

Tags :

Share via