நீரில் மூழ்கி கணவர் - மகன் பலி: மனைவி தற்கொலை முயற்சி

துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையை சேர்ந்த கணவர், மகன் பலியான தகவலை அறிந்த மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாதவன் (55) மற்றும் அவரின் மகன் கிருஷ்ண சங்கர் (22) அண்மையில் துபாய் ஹோட்டலில் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் இழப்பை தாங்க முடியாமல் தவித்த மாதவனின் மனைவி விமலா தன் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.
Tags :