மதுரை மாநகராட்சியின் முதல் மேயரான முத்துவின் வெங்கல சிலையை  திறந்து வைத்தார்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 31-05-2025 11:28:52pm
மதுரை மாநகராட்சியின் முதல் மேயரான முத்துவின் வெங்கல சிலையை  திறந்து வைத்தார்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக தற்போது மதுரைக்கு வந்துள்ளார். முதல் நாள் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகர பகுதிகளில் 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோடு சோவில் பங்கேற்று மக்களை சந்தித்தார், மாலை 5.30 மணிக்கு பெருங்குடியில் தொடங்கிய ரோடு சோ அவனியாபுரம் வில்லாபுரம், ஜெயவிலாஸ் சந்திப்பு, சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், டிவிஎஸ் நகர், பழங்காநத்தம், பொன்மேனி, காளவாசல், குரு தியேட்டர், ஆரப்பாளையம், A.A.ரோடு, புது ஜெயில் ரோடு வழியாக ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் இரவு 9.15 மணிக்கு நிறைவடைகிறது, பெருங்குடி முதல் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வரை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி முதலமைச்சரை வரவேற்றனர், மதுரையில் மேயர் முத்துவின் வெங்கல சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார், மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு மெஜிரா கோட்ஸ் ஆலை முன் அமைக்கப்பட்ட மதுரை மாநகராட்சியின் முதல் மேயரான முத்துவின் வெங்கல சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார், நிகழ்வில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, மூர்த்தி, பிடிஆர் மற்றும் மேயர் முத்து குடும்பத்தினர் பங்கேற்றனர், 

 

Tags : மதுரை மாநகராட்சியின் முதல் மேயரான முத்துவின் வெங்கல சிலையை  திறந்து வைத்தார்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Share via