திமுக நிர்வாகி கைது

by Staff / 21-11-2023 04:17:39pm
திமுக நிர்வாகி கைது

கோவை தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை இணைச் செயலாளராக உள்ளார் பைஜில், இவருடைய மனைவி அம்பராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த பைசல், அம்பராம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் சொந்தமாக மினி ஆட்டோ வைத்துள்ளார், அதில் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். வண்டியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு அம்பராம்பாளையம் ஆல்வா மருத்துவமனை எதிரில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார் அப்போது அங்கு குடிபோதையில் வந்த அம்பராம்பாளையம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சகர்பானுவின் கணவர் பைஜில் யாருடா பஞ்சாயத்து தலைவர் என்ன கேட்காமல் இங்கு வண்டியை நிறுத்தினது என்று தகாத வார்த்தைகளில் திட்ட ஆட்டோவின் நான்கு சக்கரங்களிலும் காற்றை திறந்து விட்டு உள்ளார். இதை அருகில் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் டில் இருந்து வந்த மேற்படி இளையராஜா எதற்காக வண்டியில் காற்றை திறந்து விட்டீர்கள் என தட்டி கேட்டபோது அவரை தகாத வார்த்தைகள் திட்டி பலமாக தாக்கி நெஞ்சு பகுதியில் கடித்து காயப்படுத்தியுள்ளார், இதில் பலத்த காயமடைந்த இளையராஜா பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இளையராஜா ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பைசல் மீது பொது இடத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கி காயப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via