இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்ததங்கம் விலை.

by Editor / 28-10-2023 10:26:01am
 இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்ததங்கம் விலை.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.46,000-ஐ கடந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐப்பசி மாதம் பிறந்துள்ள நிலையில், சுபமுகூர்த்த நாட்கள் நெருங்கி வருகின்றன. இந்த சூழலில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,160-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,770-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கும், கிலோ வெள்ளி ரூ.77,5000க்கும் மாற்றம் ஏதும் இன்றி விற்கப்படுகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன போர் எதிரொலி காரணமாக  தங்கம் விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.

 

Tags : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை

Share via