இன்று 2023ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்
இன்று 2023ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1.05 முதல் 2.22 வரை நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணத்தை மக்கள் தெளிவாக பார்க்கலாம். சந்திர கிரகணம் இந்தியாவில் தெரிவதால் 8 மணி நேரம் தோஷ காலமாக கருதப்படுகிறது. இந்த கிரகணம் ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம் நட்சத்திரங்களுக்கு தோஷம் தரும் என்று சொல்கிறார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள், மறுநாள் காலை எழுந்து நீராடி சிவாலயம் சென்று சிவனுக்கு வில்வம் வாங்கி தரிசனம் செய்வதால் கிரகண தோஷம் நீங்கும். மேலும் சந்திர கிரகணம் நடப்பதால், இன்று இரவு சாப்பிடக்கூடாது என சொல்வது அறிவியல் ரீதியான உண்மையில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags : கடைசி சந்திர கிரகணம்