தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கர்நாடகா, தொடர்ந்து குறைவாகவே தண்ணீர் திறப்பதாக தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்தது. குறைவான மழை பெய்யும் காலங்களில் உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
Tags :