தினசரி டெங்கு பாதிப்பு 500-ஐ கடந்தது

by Staff / 21-09-2023 12:31:13pm
தினசரி டெங்கு பாதிப்பு 500-ஐ கடந்தது

கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் டெங்கு, ப்ளூ காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. இதனால், 24 மணி நேரமும் மருத்துவர்களை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via