பதவி ராஜினாமா? பாமக MLA அருள் விளக்கம்

by Editor / 30-05-2025 01:28:15pm
பதவி ராஜினாமா? பாமக MLA அருள் விளக்கம்

நான் ராஜினாமா செய்வதாக எங்கும் கூறவில்லை. ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்துள்ளோம் என பாமக MLA அருள் தெரிவித்தார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக MLA அருள், "ராமதாஸ் எங்களுக்கு கடவுள். அன்புமணியும் கடவுள் தான். அரசியலே வேண்டாம் என உணரும் அளவு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது. 3வது பெரிய கட்சியில் இப்படியான நெருக்கடி காலம் ஏற்பட்டுள்ளது வருத்தத்தை தருகிறது. இதனை கடந்து வருவோம்" என பேசினார்.

 

Tags :

Share via