சென்னையில் புத்தகக் கண்காட்சி நாளை புதன்கிழமை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

by Admin / 02-01-2024 10:39:33am
சென்னையில் புத்தகக் கண்காட்சி நாளை புதன்கிழமை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை இந்த ஆண்டு ஒய் .எம். சி. ஏ .மைதானத்தில் நாளை புதன்கிழமை ஜனவரி 3ஆம் தேதி நாலு முப்பது மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.. இந்த 47வது புத்தக கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்படுகிறது. ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஜனவரி 21 ஆம் தேதி வரை இப்புத்தக கண்காட்சி நடைபெறும். புத்தகக் கண்காட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்கிறார்.. பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் பொது நூலகத் துறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories