பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் பச்சிளம் சிசு -சாக்கடையில் மீட்பு.
தஞ்சை: பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில் துாய்மை பணியாளர்கள், சாக்கடையில் தேங்கிய கழிவுகளை சுத்தம் செய்துக்கொண்டிருந்தனர். அப்போது, பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவின் உடல் கிடப்பதை கண்டனர். உடனடியாக சுகாதார ஆய்வாளருக்கு துாய்மை பணியாளர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். சிசுவின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு எடுத்துச் சென்றனர். பெண் சிசுவின் உடல் கிடைத்தப்பகுதியில் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் உள்ளது. போலீசார் அந்த மருத்துவமனைகளில் உள்ள சி.சி.டி.வி.,கேமராக்களை ஆய்வு செய்து, குழந்தையை வீசிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags : பெண் பச்சிளம் சிசு -சாக்கடையில் மீட்பு.







.jpg)











