இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்... ?

by Editor / 19-10-2022 11:34:07pm
இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்... ?

கோவிலிலும் சரி ! வீட்டிலும் சரி ! இறைவனின் சிலையை படத்தை துடைத்து ! அபிஷேகம் பண்ணி ! பூவாலும் ! சந்தனத்தாலும் ! தங்க நகைகளாலும் ? ஏன் அலங்காரம் செய்கிறோம் ? இறைவன் பவனி வரும் பல்லக்கு தேர் போன்றவற்றையும் நாம் ஏன் அலங்காரம் செய்கிறோம் ?

இறைவன் நம்மை கேட்டானா ? என்னை அலங்காரம் செய் என்று ? இறைவன் நம்மிடம் கோரிக்கை வைத்தானா ? இல்லையே ! பின் எதற்கு இந்த அலங்காரம் ?

பொதுவாக மனித மனம் அலைபாயக் கூடியது ! ஒரு இடத்தில் நிலைத்து நில்லாதது ! அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும் என்றால் ? மனக் கட்டுப்பாடு என்பது அவ்வளவு எளிதில் வருவது இல்லை !! 

மனம் அலைபாயாமல் இருக்க ! முதலில் மனதை ஒன்றின் மேல் படிய ! பதிய வைக்க வேண்டும் ! மனம் அதில் லயிக்க வேண்டும் ! அதிலேயே மனம் கலக்க வேண்டும் !! 

அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி ? அலங்காரம் ! அதனால் தான் கோவிலை நமது அனைத்து புலன்களுக்கும் இன்பம் தரும்படி அமைத்தார்கள் !!

காதுக்கு இனிமையாக பாடல்கள் நாதஸ்வரம் ! சொற்பொழிவுகள் என்றும் ? மூக்குக்கு இனிமையாக கற்பூரம் ! ஊதுபத்தி ! மலர்கள் ! என்றும் ? நாவுக்கு இனிமையாக பிரசாதம் என்றும் ! உடலுக்கு இனிமையாக நந்தவனக் காற்றும் ! கண்ணுக்கு இனிமை தர கோவில் சிற்பங்கள் ! பெரிய கோபுரங்கள் ! அழாகன வடிவங்கள் என்று ! அந்த சிலைகளுக்கு அலங்காரம் என்று வைத்தார்கள் !!

இறைவனை எவ்வளவுக்கெவ்வளவு அலங்காரம் பண்ணுகிறோமோ ? அவ்வளவுக்கு அவ்வளவு ! நம் கண்ணுக்கு இனிமை ! உதாரணமாக நம் குழந்தைகளுக்கு நாம் புதிது புதியதாய் ஆடை அணிகலன்கள் அணிவித்து ! பார்த்து மகிழ்கிறோம் அல்லவா ? அது போல ! அலங்காரம் பண்ணுவது நாம் கண்டு மகிழ !! 

இப்படி அழகை இரசிக்கும் போது மனம் லயிக்கிறது ! மனம் ஒன்று படுகிறது ! மனதில் ஆவல் எழுகிறது ? ஒன்றை ரசிக்கும் போது ? ரசிப்பின் உச்சத்தில் கண்ணை மூடி அமர்ந்து கொள்கிறோம் ! கண்ணை மூடி ரசிக்கிறோம் ! அது சிறந்த உணவாக இருக்கட்டும் ? சிறந்த இசையாக இருக்கட்டும் ? நல்ல நறுமணமாக இருக்கட்டும் ? ரசனையின் உச்சம் ! கண் மூடி உள்ளுக்குள் அதை அனுபவிக்கிறோம் !! 

அதைப்போல இறைவனை ! அவன் உருவத்தை ! சிங்காரம் பண்ணி பார்க்கும் போது ? அதில் லயித்து ! அதை அப்படியே மனதில் காண்போம் !!

அது தான் தியானம் ! உருவத்தில் இருந்து ! உருவம் இல்லா அந்த சக்தியை அறிவதுதான் தியானம் !!

ஆனால் ? ஆன்மீகத்தில் முதிர்ந்த ! யோக ! சித்து ! ஞானத்தில் ! அனுபவம் உள்ளவர்களுக்கு ? உருவமோ ? ஆடை ! அலங்காரங்களோ ? தேவையில்லை !!

ஏனெனில் ? அவர்களின் மனம் ! இறைதன்மை ஏற்கெனவே முழுவதும் நிரம்பி உள்ளதால் ? அவர்கள் மனம் எப்பொழுதும் ? இறைவனை நோக்கிய ஒரேநிலையில் தான் இருக்கும் !!

இவர்களுக்கு கோயில் ! குளங்கள் ! சிலைகள் ! அலங்காரங்கள் ! எதுவும் தேவையில்லை ! காடுகளிலோ ? குகைகளிலோ ? வாழ்வார்கள் ! உதாரணத்திற்கு : யோகிகளும் ! ஞானிகளும் ! சித்தர்களும் !!

இவர்கள் மனம் எப்பொழுதும் இறைவனை நோக்கி ஒன்று பட்ட நிலையில் தான் இருக்கும் !!

ஆனால் ? சாதாரண (கிரகஸ்தன்) குடும்ப வாழ்வை வாழ்பவனுக்கு ? பல குழப்பங்களும் ! கலக்கங்களும் ! மனக்கவலைகளும் ! தெளிவில்லாத சிந்தனைகளும் ! ஒருநிலைபடுத்த முடியாத மனமும் இருக்கும் !!

இந்த நிலையில் உள்ளவர்களுக்கு மனதை ஒருநிலைப்படுத்தவும் ! ஓரளவாவது மனதை இழுத்து கொண்டுவந்து நிலை நிறுத்தவுமே ? இந்த இறை அலங்கார முறைகள் ! நம் முன்னோர்களால் கொண்டு வரப்பட்டது.

 

Tags :

Share via