6-மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு நெறி முறைகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது:தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி உள்ளோம் விரைவில் அதற்கான அனுமதி வந்தவுடன் சென்னை அண்ணா நகர் பகுதியில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல்லினை தமிழக முதல்வர் நட்ட உள்ளார்,மேலும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்காக சென்னையில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்டம் தோறும் மருத்துவமனை அமைப்பது என்பது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் இலக்கு
அதைபோல் தமிழகத்தில் இப்போது புதியதாக உருவாகி உள்ள தென்காசி, ராணிபேட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், ஆகிய 6-மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்பட்டுள்ளது எதிர் வரும் காலத்தில் அவை நிறைவேறும்.என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
Tags : Medical college request for 6 districts has been submitted to the Central Government - Minister Ma Subramaniam