வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயல் உருவாக வாய்ப்பு.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், காற்றின் வேகம் 64.8 கி.மீ (35 நாட்ஸ்) இருந்தால் அதனை புயல் எனக் கூறுவோம். தற்போதுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 83 கி.மீ. (45 நாட்ஸ்) வரை வலுப்பெற வாய்ப்புள்ளது. மேகக்கூட்டங்கள் அடத்தியாக உள்ளதால் இன்று பிற்பகல் முதல் மீண்டும் மழையை எதிர்பார்க்கலாம். மரக்காணத்தில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
Tags : வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயல் உருவாக வாய்ப்பு.