46 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார்

by Editor / 05-09-2022 11:47:58am
46 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார்

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்க உள்ளார்.தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணைய தளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


 

 

Tags :

Share via

More stories