ரயிலை கவிழ்க்க சதி...?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் பாறை கற்கள் மற்றும் இறந்த மாட்டின் தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி.காந்திதம் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பகுதியாக வந்தபோது தண்டவாளத்தில் இருந்த பாறை கற்கள் மீது பலத்த சத்தத்துடன் மோதிய நிலையில் சுதாரித்துக்கொண்டு ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி அருகில் உள்ள கேட் கீப்பரிடம் தகவல தெரிவித்துள்ளார்.காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்தில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : ரயிலை கவிழ்க்க சதி.