முதல்வர் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி பயிற்சிக்கூட்டம்.
'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பயிற்சி கூட்டத்தை மாமல்லபுரத்தில்இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த பயிற்சி கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகரப் பகுதி பேரூர் கழக செயலாளர்கள் இந்த பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக செயலாளரும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னின்று செய்துள்ளார்.இந்த கூட்டத்தில் துணைமுதல்வர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
Tags : முதல்வர் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி பயிற்சிக்கூட்டம்.



















