நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் மோடியை ஆரத்தழுவி அன்போடு வரவேற்றார்
பிரதமர் நரேந்திர மோடியின் நியூசிலாந்து பயணம் இரு நாட்டு உறவுகளிலும் ஒரு மிக முக்கியமான வரலாற்று மைல்கல்லாகும். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்திற்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இது. கடந்த 1986ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி நியூசிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஆக்லாந்து சர்வதேச விமான நிலையத்திற்கு நேரில் வந்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் மோடியை ஆரத்தழுவி அன்போடு வரவேற்றார் விமான நிலையத்தில் நியூசிலாந்தின் பாரம்பரிய முறைப்படி 'மௌரி' பழங்குடியின மக்களின் சிறப்பான கலாச்சார வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சிறப்பான வரவேற்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "ஆக்லாந்து வந்தடைந்தேன். பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் இந்த அன்பான வரவேற்புக்கு நன்றி. இது இரு நாட்டு நட்புறவின் ஆழத்தைக் காட்டுகிறது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
: சமீபத்தில் கையெழுத்தான இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
ஆக்லாந்தின் ஸ்பார்க் அரேனாவில் நடைபெறவிருக்கும் "கியா ஓரா மோடி" சமூக நல நிகழ்ச்சியில், அங்கு வாழும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு, தனது 3 நாடுகள் பயணத்தின் இறுதிப் பகுதியாகப் பிரதமர் மோடி நியூசிலாந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :


















