கரூர் சம்பவம் தனது நெஞ்சில் ஆறாத காயமாக உள்ளது -தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகதலைவருமான விஜய்
இன்று கரூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகதலைவருமான விஜய் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.அன்று கரூரில் நடந்த தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, முதலமைச்சராக வருவது இதுவே முதல்முறை. இக்கூட்டத்தில் . கரூர் சம்பவம் தனது நெஞ்சில் ஆறாத காயமாக உள்ளது என்றும் இது திட்டமிட்ட சதி என்றும்:கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது என்று உங்களுக்குத் தெரியாதா? அப்போது காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுத்ததா?".. அரியலூரில் எச்சரித்த போலீஸ், கரூரில் ஏன் முன்கூட்டியே எச்சரிக்கவில்லை? நெடுஞ்சாலையில் இருந்து எங்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையின் நாடகத்தை அன்று நம்பி ஏமாந்துவிட்டேன்..மக்களைக் காக்க வைப்பவன் அல்லன்: அரசியல் ஆதாயத்திற்காக மக்களைக் காக்க வைத்து வேடிக்கை பார்ப்பவன் நான் அல்லன் என்றும் தவெக-வை சோஃபா, வாஷிங் மெஷின் என திமுகவினர் விமர்சிக்கிறார்கள். ஆனால், திமுக தான் ஊழல் செய்யும் வெண்டிங் மெஷின்மற்றும் பணம் எண்ணும் மெஷின் போலச் செயல்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும் சேர்ந்து பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் மக்களிடம் கொள்ளையடித்துள்ளனர்..: திமுகவின் கடந்த கால நிதி நிர்வாகம் ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியது போல் இருந்தது; மக்கள் பணம் எங்கே போனது என்றே தெரியவில்லை. மேகதாது அணை வழக்கில் தமிழ்நாட்டின் மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோது ஆட்சியில் இருந்தது யார்? திமுக ஏன் அப்போது சரியாக வாதாடவில்லை?உரிமை மீட்பு: தற்போது தவெக அரசு சட்டமன்றத்தில் இதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளது என்றும்.தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பெற வேண்டுமோ அப்படிப் பெறுவோம். தான் கரூருக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கக் கூடாது என திமுக உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை கோரியது. ஆனால் உச்ச நீதிமன்றம் திமுகவை கடுமையாகக் கண்டித்து நல்லா தலையில் நறுக்குன்னு குட்டுபோட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. உங்களுடைய ஸ்டாலின் ஆபரேட்டிங் புரொசீஜர்ஸ் எல்லாம் இனி செல்லாது. நீங்கள் இப்போது ஆட்சியில் இல்லை, யதார்த்தத்திற்கு வாருங்கள் என்றும் திமுகவும் அதிமுகவும் தனித்தனியாகச் செயல்படுகிறதா அல்லது கைகோர்த்துச் செயல்படுகிறதா என்பதை வரவிருக்கும் இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டட்டும். வரும் இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை மக்கள் நல்லா வச்சு வெளுத்து வாங்க வேண்டும்.: குறைவாகப் பேசு, நிறைவாக வேலை செய் என்பதே நமது அரசின் அரசியல் கொள்கை என்று விஜய் விமர்சனம்வைத்தாா்.
Tags :


















