தமிழக முதலமைச்சர் விஜய் நாளை கரூரில்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல்

by Admin / 09-07-2026 11:06:31am
தமிழக முதலமைச்சர் விஜய் நாளை கரூரில்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல்

தமிழக முதலமைச்சர் விஜய் நாளை கரூர்வெண்ணைமலை அருகே உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில், கடந்த 2025 தேர்தல் பரப்புரையின் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதோடு 32 பேருக்கு கருணை அடிப்படையில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு ஆணைகளையும் வழங்க உள்ளார்.  அத்துடன் 1,700 கோடி மதிப்பீட்டிலான புதிய காலனி உற்பத்தியை தொழிற்சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இத்தொழிற்சாலை வருவதன் மூலம் அங்குள்ளோர் 13 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் . காவல்துறையினரின் நெறிமுறைப்படி 5000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு ஏற்கனவே விஜய் தனிப்பட்ட முறையில் 20 லட்ச ரூபாயும் அரசு இன்னபிற வழிகளில் 15 லட்சம் ஆக 35 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய நிலையில், இப்பொழுது 32 பேருக்கு பல்வேறு துறைகளில் பணி நியமனை ஆணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாம் தமிழர் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் பங்கேற்கும் அரசு முறை முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo