பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி அரேபிய இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் உடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்..

by Admin / 29-03-2026 02:21:10am
பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி அரேபிய இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் உடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்..

பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி அரேபிய இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் உடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். மேற்கு ஆசிய பகுதிகளில் நிலவும் போர் சூழல் மற்றும் மோதல் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர் சர்வதேச கடல் சார் வணிக பாதைகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் கப்பல் போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதையும் இருவரும் வலியுறுத்தினர் பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மற்றும் உள் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி தனது கண்டனத்தை பதிவு செய்தார் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களின் நலனுக்காக சவுதி அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேற்கு ஆசிய மோதல்கள் தீவிரமடைந்த பிறகு இரு நாட்டு தலைவர்களும் இரண்டாவது முறையாக தொலைபேசியில் உரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

Tags :

Share via

More stories