பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்- செய்திகளைமறுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க் கலந்து கொண்டதாக வெளியான செய்திகளை இந்திய வெளிவரவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த தொலைபேசி உரையாடல் இரு தலைவர்களுக்கும் இடையே மட்டுமே நடந்த நேரடி உரையாடல் என்றும் இதில் மூன்றாம் நபர் எவரும் பங்கேற்கவில்லை என்றும் வெளி உறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெளிவுபடுத்தியுள்ளார். எலான் மஸ்க் இந்த அழைப்பில் இணைந்ததாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் மற்றும் ஈரான் தொடர்பான விவகாரங்கள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவே இந்த அவசர தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது.
Tags :



















