ராட்ஷச ஊஞ்சல் அறுந்து விழுந்த விபத்தில் காவல் ஆய்வாளர் உயிர் இழந்தார்.
ஹரியானா மாநிலம் பரிதாபத்தில் நடைபெறும் சூரஜ் குன்ட் சர்வதேச கைவினை மேலாவில் டாப் ஸ்பின் ராட்ஷச ஊஞ்சல் அறுந்து விழுந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெகதீஸ் பிரசாத் என்ற காவல் ஆய்வாளர் உயிர் இழந்தார். சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில் சுமார் 26 பேர் அமைந்திருந்த ஊஞ்சலின் ஒரு பக்கம் திடீரென அறுந்து விழுந்து தரையில் பயங்கர சத்தத்துடன் மோதியது சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்க முயன்ற போது காயமடைந்த காவல் ஆய்வாளர் ஜக்தீஸ் பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவத்தை அளித்து ஹிமாச்சல் பன் பேர் உரிமையாளர் முகமது ஜாகிர் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதே கண்காட்சி வளாகத்தில் பிற்பகலில் வாயில் எண் இரண்டு எழுந்து விழுந்ததில் குழந்தை உட்பட இருவர் காயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















