கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

by Staff / 18-12-2022 03:51:07pm
கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் வழிகாட்டுதலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடமான அத்திபாளையம் பேருந்து நிலையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பசந்தகுமார் சாகு என்பவரது மகனான ராஜேந்திரகுமார் சாகு (31) என்பவரை கைது செய்து 16 1/2 கிலோ எடையுள்ள 70 கஞ்சா சாக்லேட் மற்றும் 1. 100 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo