நெல்லை,பாளை பேருந்து நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தது

by Editor / 08-12-2021 01:14:20pm
நெல்லை,பாளை பேருந்து நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தது

திருநெல்வேலி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்  ரூபாய் 110.19 கோடி மதிப்பீட்டில் 12 முடிவுற்ற திட்ட பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

66 கோடியில் புதிய பேருந்து நிலையம், 13.8 கோடியில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட 12 திட்டப்பணிகளை திறந்து வைத்துள்ளார்.நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில், பேருந்து சேவை தொடங்கியது..

6 நடைமேடைகளாக உயர்த்தப்பட்ட திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் மாற்றியமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்.

நடைமேடை 1:
தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகள் (வள்ளியூர், நாகர்கோவில், திருவனந்தபுரம்)

நடைமேடை 2:
கிழக்கு (திருச்செந்தூர்) மற்றும் தென்கிழக்கு (சாத்தான்குளம்) நோக்கி செல்லும் பேருந்துகள்

நடைமேடை 3:
வடமேற்கு (சங்கரன்கோவில், ராஜபாளையம், குமுளி) நோக்கி செல்லும் பேருந்துகள் மற்றும் தூத்துக்குடி பேருந்துகள்.

நடைமேடை 4:
மேற்கு நோக்கி செல்லும் பேருந்துகள் (தென்காசி, புளியங்குடி, சுரண்டை,  பாபநாசம்).

நடைமேடை 5:
வடக்கு நோக்கி செல்லும் (மதுரை மார்க்கம்) கோவை, திண்டுக்கல், திருச்சி, திருப்பூர்  பேருந்துகள்.

நடைமேடை 6:
விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள்

 (சென்னை, பெங்களூரு, வேளாங்கண்ணி,  திருப்பதி, ஊட்டி)

பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.


திருநெல்வேலி புதிய புனரமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் சார்பாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 559 புறநகர் பேருந்துகள் மூலமாக 1380 நடைகள் நடைபெறும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக 186 நடைகளும் 24 நகரப் பேருந்துகள் மூலம் 210 நடை களும் இயக்கப்பட்டு  வருகின்றன. புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை பேரூந்து நிலையம் வழியாக 110 பேருந்துகள் மூலம் தினமும் இயக்கப்படுகின்றன.
 

நெல்லை,பாளை பேருந்து நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தது
 

Tags :

Share via