அமைச்சர் எ.வ.வேலு கல்லூரி நிறுவனங்கள் அவரது வீடு மற்றும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை.

by Editor / 03-11-2023 09:06:10am
அமைச்சர் எ.வ.வேலு கல்லூரி நிறுவனங்கள் அவரது வீடு மற்றும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை.


திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை  எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரி நிறுவனங்களில் வருமானவரி துறையினர் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் மகளிர் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், அருணை கிரானைட், ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் வருமானவயி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்குள் வருபவர்களின் ஐடி கார்டு காண்பித்த பின்னர் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
எ.வ.வேலு திமுகவில் முக்கிய அமைச்சரவை இடம் பெற்றுள்ள நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வருமான வரித்துறையினர் வந்து இறங்கி துணை ராணுவத்தினர் மூலம் பாதுகாப்புடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் கல்லூரி நிர்வாகத்திற்குள் மாணவர்களை அழைத்துச் செல்ல வெளியே வரும் வாகனங்கள் மீண்டும் துணை இராணுவத்தினரால் உள்ளே திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. வருமானவரி துறையினர் 120 பேர் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : அமைச்சர் எ.வ.வேலு கல்லூரி நிறுவனங்கள் அவரது வீடு மற்றும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை.

Share via