தமிழகத்தின் அனைத்து குக்கிரமங்களிலும் கஞ்சா நடமாட்டம்-நயினார் நாகேந்திரன்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் சென்னையிலிருந்து வந்த பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்
நான் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக சொல்லி வருகிறேன் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறேன் திராவிட முன்னேற்ற கழக அரசை அகற்றுவதற்கு எல்லோரும் ஓர் அணியில் சேர்ந்தால்தான் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
புதிதாக பதவி ஏற்ற பின்பு பாரத பிரதமர் உள்துறை அமைச்சர் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் தேசிய தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வந்துள்ளேன்.
கட்சியை பலப்படுத்தி பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரையும் பலப்படுத்த வேண்டும் கூட்டணி சுமூகமான சூழலில் கொண்டு செல்ல ஆலோசனை.தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை.நீதிமன்றம் சில அமைச்சரின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது,
நீதிமன்ற அறிவுத்தலை கேட்டு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்,திமுகவின் 2.0 விற்கு அடுத்து ஒன்று உள்ளது அதைத்தான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக தேச உணர்வு வேண்டும் நமது நாட்டிலேயே இருந்து கொண்டு இன்னொரு நாட்டிற்கு ஆதரவாக பேசுவது தேசத் துரோக செயல் பாகிஸ்தானியர்களே எங்களுக்கு இந்த நாடு வேண்டாம் எங்களுக்கு மோடி வேண்டும் என்று சொல்லுவதை பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள் ஆனால் நமது நாட்டில் இருந்து கொண்டே நமக்கு எதிராக பேசக்கூடிய அரசியல்வாதிகளை என்ன சொல்ல முடியும் தேச விரோதிகள் என்று தான் சொல்ல முடியும்..
தமிழகம் முழுவதும் டிஆர்பி தேர்வு எழுதி விட்டு ஏராளமானோர் வேலையில்லாமல் உள்ளனர் ஐம்பதாயிரம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர் திமுக தேர்தல் அறிக்கை177 என்ன கூறி உள்ளனர் என்றால் அனைவருக்கும் ஆசிரியர் வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று கூறியுள்ளனர் ஆனால் இதுவரை செய்யவில்லை நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்ய வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து குக்கிரமங்களிலும் கஞ்சா நடமாட்டம் உள்ளது தமிழகத்தில் காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் இதற்கு துரித நடவடிக்கை எடுக்க வில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.
Tags : தமிழகத்தின் அனைத்து குக்கிரமங்களிலும் கஞ்சா நடமாட்டம்



















