நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் பலி.

by Staff / 13-12-2023 04:31:27pm
நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் பலி.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதி சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகன் மாடசாமி(44) மாடசாமி சொந்தமாக ஆட்டு கொட்டகை அமைத்து 20 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் கடித்ததில் 7ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் விளாத்திகுளம் கால்நடை மருத்துவர், உயிரிழந்த ஆடுகளை பிரேத ஆய்வு செய்தபின் புதைத்தனர். விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் மட்டும் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள் நாய்கள் கடித்து உயிர் இழந்தது என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Tags :

Share via

More stories

Logo