ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு

by Staff / 15-05-2024 05:22:23pm
ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு

ஆந்திர தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி நேரில் ஆஜராகுமாறு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலின் போது அங்கு பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தது. இந்நிலையில் அப்போது நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் தேர்தலின் போது, ஏன் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது தொடர்பாக விளக்கமளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via