நெல்லையில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 4 ஐம்பொன் சிலைகள் வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பேருந்து நிலைய கழிவறை வாசலில் பை ஒன்று இருப்பதை கண்ட ஐயப்பன் என்பவர் அதனை திறந்து பார்த்தபோது.
உள்ளே அரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன 4 சுவாமி சிலைகளும் ஒரு கத்தியும் இருந்துள்ளன.
அந்த பையை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற ஒப்படைத்தார் சிலைகளை கழிவறை அருகே வைத்து சென்றது யார்.. கோவில்களில் திருடப்பட்ட சிலைகளா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
Tags :