எண்ணெய் டேங்கர் கப்பல் மீது சரக்கு கப்பல் மோதல்

by Admin / 01-02-2022 02:29:18pm
 எண்ணெய் டேங்கர் கப்பல் மீது சரக்கு கப்பல் மோதல்

நெதர்லாந்து அருகே கடலில் வீசிய புயலின்போது சரக்கு கப்பல் மீது மற்றொரு கப்பல் மோதிய சம்பவத்தில் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஜெர்மனியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் நோக்கி பிரம்மாண்டமான சரக்கு கப்பல் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கோரி புயலால் கடல் கொந்தளிப்பு  காணப்பட்டது.

கடலில் இருந்து நாலாபுறமும் பிரமாண்டமான அலைகள் ஆர்ப்பரித்து இருந்தபடி காணப்பட்டன இத்தகைய சூழ்நிலையில் அந்த சரக்கு கப்பலின் மீது எண்ணை மற்றும் வேதிப்பொருள்கள் ஏற்றி வந்த டேங்கர் கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது.

இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் விரைந்து சென்று ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் சிக்கியிருந்த 18 பேரை பத்திரமாக மீட்டனர்   

 

Tags :

Share via