குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி.. ரூ.3 லட்சம் நிதியுதவி

தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஜஸ்வந்த் (8), மாதவன் (10) மற்றும் பாலமுருகன் (10) ஆகியோர் நேற்று (ஜூலை 11) குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
Tags :