ராணி எலிசபெத்தின் 8 பேரக்குழந்தைகள் ராணியின் உடல் சுற்றி நின்று மரியாதை
இங்கிலாந்து நாட்டின் ராணி 2ம் எலிசபெத் கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். ராணி எலிசபெத்தின் பேரக்குழந்தைகள் அனைவரும் மேடையில் அவரது சவப்பெட்டியை சுற்றி நின்று அஞ்சலி செலுத்தினர்.
மன்னர் சார்லஸின் மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி, இளவரசி அன்னேவின் குழந்தைகளான ஜாரா டிண்டால் மற்றும் பீட்டர் பிலிப்ஸ், இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களான பீட்ரைஸ் மற்றும் யூஜெனி, இளவரசர் எட்வர்ட் லேடி லூயிஸ் விண்ட்சர் மற்றும் ஜேம்ஸின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். வேல்ஸ் இளவரசர் மற்றும் சசெக்ஸ் பிரபு உட்பட ராணியின் எட்டு பேரக்குழந்தைகள் அவரது சவப்பெட்டியைச் சுற்றி நின்று அஞ்சலி செலுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது.
Tags :