தனுசுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் குபேரா

குபேரா படம் தற்பொழுது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் படம் வசூல் குறிப்பிடத்தக்க நிலையில் சேர்ந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது இந்த படத்தில் தனுஷ் கதாநாயகன் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கதைக்களம் முழுவதும் தானே வருவதால் படத்தின் கதாநாயகன் நான்தான் என்று நாகார்ஜுனா தன்னுடைய கருத்தை பதிவு செய்தது என்று இது இணையதளங்களில் அதிகமாக பேசு பொருளாகி உள்ளது. குபேரா இயக்குனர் சேகர் கம்முலாவின் படமே தவிர தனுஷ் படமும் நாகார்ஜுனா படமும் அல்ல என்றும் ஒரு கருத்து உலவிக் கொண்டிருக்கிறது இதற்கு நாகார்ஜுனா பட ப்ரொமோஷன் நேரத்தில் பேசியது குறிப்பிடத்தக்கது. நேரடியான தமிழ் படமாக இல்லாமல் தெலுங்கில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படத்தில் தனுசு நடித்தது மூலம் அவருக்கு தொடர்ச்சியாக தமிழ் படங்களில் சொல்லிக் கொள்ளும் விதத்தில் ராயன் பெரும் வெற்றியை பெறாத நிலையில், தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் படம் பெரிதாக வசூலில் சாதிக்கவில்லை என்பதனால் குபேரா படம் தனுசுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நாகார்ஜுனா கருத்து எரிச்சல் அடையவைத்துள்ளது . தமிழில் இந்த படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது .படம் கிட்டத்தட்ட85கோடிக்குமேல்வசூலித்துள்ளதாகதகவல்.

Tags :