இஸ்ரேலின் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்

by Editor / 16-06-2025 12:54:32pm
இஸ்ரேலின் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல்

இஸ்ரேல் - ஈரான் இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இருதரப்பிலும் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை முன்னெடுக்கிறது. இந்நிலையில், டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில், தூதரகம் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. அங்குள்ள பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்ற விபரம் இல்லை. இதனால் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via