நியூ கினியா நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்
பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், $1 மில்லியன் டாலர் மதிப்பிலான உடனடி நிவாரண உதவியையும் இந்தியா அறிவித்துள்ளது.
Tags :