தொடர் பெட்ரோல்,மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு - 150 நபர்களிடம் விசாரணை

by Editor / 26-09-2022 12:18:58pm
தொடர் பெட்ரோல்,மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு - 150 நபர்களிடம் விசாரணை

நாடுமுழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள்,அலுவலகங்களில்  என்.ஐ.ஏ நடத்திய சோதனைகளை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் மண்ணெண்ணெய்,பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.நேற்று நள்ளிரவு வரைநடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.இந்த நிலையில் பல பகுதிகளில் இந்த சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் சிட்டியில்-2,திண்டுக்கல்லில்-1,ஈரோட்டில்-4,மதுரை சிட்டியில் -3,கோவையில்-3 கோவை சிட்டியில்-2 என மொத்தம் -15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.150க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணைகளை நடந்து வருவதாகவும்,சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழக காவல்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர் பெட்ரோல்,மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு - 150 நபர்களிடம் விசாரணை
 

Tags :

Share via

More stories

Logo