1 மணி கடும் போக்குவரத்து நெரிசல்.

தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதால் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் முதல் கூடுவாஞ்சேரி வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னை to திருச்சி மார்க்கம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசல் சிக்கியுள்ளன. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலால் பயணிகள் வாகன ஓட்டிகள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.போக்குவரத்து நெரிசலை தவிர்த்து கடந்து செல்ல இருசக்கர வாகனங்கள், கார்கள் அணுகு சாலையை பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.இதனால் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
Tags :