100 0த்துக்கும் மேற்பட்ட அசத்தல் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் பிறைசூடன்
(நினைவலைகள் )
தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான 65 வயதுடைய பிறைசூடன் உடல்நல குறைவால் சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400க்கும் மேற்பட்ட பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார். செம்பருத்தி திரைப்படத்தில் நடந்தால் இரண்டடி என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவர்.
1985ல் வெளியான சிறை படத்தில் இடம்பெற்ற ராசாத்தி ரோசாப்பூ பாடல் மூலம் அறிமுகமானார்.பணக்காரன் திரைப்படத்தில் பிறைசூடன் எழுதிய நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது.1991இல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘சோலப் பசுங்கிளியே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை வென்றார் பிறைசூடன்’. பிரம்மாண்ட வெற்றிபெற்ற ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் அவர் எழுதியதே. ‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடல். ‘கலகலக்கும் மணியோசை’ (ஈரமான ரோஜாவே), ’காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’ (கோபுர வாசலிலே) என பிசூடன் பாடல்களின் பட்டியல் நீள்கிறது.
இளையராஜா இசையில் ’என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றாய்’ என்ற பாடலை எழுதினார்.
’ராஜாதி ராஜா’ படத்தில் புகழ்பெற்ற காதல் பாடலான ‘மீனம்மா மீனம்மா’.‘பணக்காரன்’ படத்துக்காக பிறைசூடன் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் பாடல்,இயக்குநர் வசந்தின் அறிமுகப்படமான ‘கேளடி கண்மணி’யில் பிறைசூடன் எழுதிய ‘தென்றல் தான் திங்கள்தான் நாளும்’,
1991இல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘சோலப் பசுங்கிளியே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை வென்றார் பிறைசூடன்’. பிரம்மாண்ட வெற்றிபெற்ற ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் அவர் எழுதியதே. ‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடல். ‘கலகலக்கும் மணியோசை’ (ஈரமான ரோஜாவே), ’காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’ (கோபுர வாசலிலே) என பிசூடன் பாடல்களின் பட்டியல் நீள்கிறது
’உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ படத்தில் இடம்பெற்ற ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ எழுதிய வெற்றிப் பாடல். ‘செம்பருத்தி’ படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ என்னும் பாடல் ரசிகர்களை ஈர்த்தது.
1990களில் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஆதித்யன் இசையில் அதிக பாடல்களை எழுதினார் பிறைசூடன். ‘அமரன்’ படத்தில் ஆதித்யன் இசையில் நான்கு பாடல்களை எழுதினார். ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என்னும் நாயக அறிமுகப் பாடலும் ‘சந்திரனே சூரியனே’ என்னும் பாடலும் மிகவும் புகழ்பெற்றவை.
எம்.எஸ்.வி. இளையராஜா, ரகுமான் ஆகிய மூவரின் இசையிலும் பாடல்களை எழுதிய பெருமையைப் பெற்றவர்
2010இல் ‘நீயும் நானும்’ படத்துக்காக ஸ்ரீராம் விஜய் இசையில் எழுதிய பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதை மூன்றாம் முறையாக வென்றார்.
நிறைய பக்திப் பாடல்களை எழுதியுள்ளார் பிறைசூடன். அவருடைய கவிதைகள் ‘தாலாட்டு முதல் தாலாட்டுவரை’ என்னும் தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன.
Tags :